முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாராப்பை கைது செய்தே தீருவோம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இ வை தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகு மான் மாலிக் கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் பிரத மர் பெனாசிர் புட்டோ கொலையில் முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தேடப்படும் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரை கைது செய்ய பாகிஸ்தான் அரசு
உறுதியாக உள்ளது. முஷாரப் வெளிநாட்டில் பதுங் கியிருப்பதால், சர்வதேச போலீசான இன்டர்போல் உதவியுடன் விரைவில் அவர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் கொண்டு வரப்படுவார். அவருக்கு கைது வாரன்ட் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்காக பாகிஸ்தான் அரசு இன்டர்போலின் உதவியை நாடப்படவிருப்பதாக அறியமுடிகின்றது. எவ்வாறாயினும் இக்கொலையுடன் தனக்கு தொடர்பில்லை என முஷாராப் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக