தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.12

சிரிய கலவரங்கள் : 350 பேர் பலி : அதிபர் அல் அசாத்துக்கு எதிரான ஐ.நா.தீர்மானம் தோற்கடிப்பு?!

சிரியாவில் அதிபர் பாஷர் அல்-அசாத்துக்கு எதிரான அ ண்மைய கலவரங்களின் போது இடம்பெற்ற தாக்குத லில் 350 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிற து.ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தினை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதன் போது ஹோம்ஸ் நகர் கட்டிடங்க ளை இலக்குவைத்து எரிகணை தாக்குதலும் இடம்பெ
ற்றுள்ளது இந்நிலையில் சிரியாவில் அல்-அசாத்தின் ஆட்சியை
முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.நாவின் முன்மொழியப்பட்ட ,தீர்மானம் சீனா மற்றும் ரஷ்யாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தீர்மானம் நடுநிலைமை தன்மையை கொண்டிருக்கவில்லை என குறித்த இரு நாடுகளும் குற்றம் சுமத்தியுள்ளதுடன், தமது வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்தி இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. '
சீனா மற்றும் ரஷ்யாவின் நடவடிக்கை வீற்றோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது. இது வருந்ததக்க, வெட்கப்பட கூடிய விடயம். சிரிய அதிபர் அல் அசாத்துக்கு ஆதரவளிப்பதென்பது, அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கு துணைபோவது போன்றது' என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

0 கருத்துகள்: