தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.1.12

எகிப்தின் கல்லாப் பெட்டியில் எலி படுத்திருக்கிறது

நேற்றுடன் எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு ஓராண்டு காலம் ஆகியது. மக்கள் புரட்சிக்கு பின்ன ராவது வாழ்வில் மாற்றம் வருமா என்று கருதியவர் களுக்கு பலத்த ஏமாற்றமே காத்திருக்கிறது. ஆர்பா ட்டங்கள், அழிவுகள் காரணமாக நாட்டின் பொருளா தாரம் படுத்துவிட்டது. பழைய சர்வாதிகாரி கொஸ் னி முபாரக் தேடிய செல்வமெல்லாம்
வற்றி இப்போ து புரட்சி புஸ்வாணமாகிவிட்டது. நாட்டின் கல்லாப் பெட்டிக்குள் எலி படுத்தி ருக்கிறது. வேலை இன்மை, வாங்க முடியாதளவுக்கு பொருட்களின் விலை உயர்வு, இராணுவத்தின் அடாவடித்தனம் யாவும் பழைய நிலைக்கே வந்துவிட்டது. பல்லக்கில் இருந்தவர்கள் இறக்கப்பட்டு இப்போது முன்னர் பல்லக்கை சுமந்தவர்கள் ஏறியிருக்கிறார்கள். மக்களின் வாழ்க்கை பழையபடி செக்குமாட்டு வாழ்வாக மாறியுள்ளது. நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமிய சகோதர அணி அரைப்பங்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் அவர்கள் உருப்பட முடியாத மற்றைய பிற்போக்குவாத முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு வைத்து ஆட்சியை நடாத்துவதால் அந்த வெற்றியும் பயனற்று போயுள்ளது. எகிப்தில் மட்டுமல்ல ரூனிசியாவிலும் இதே பிரச்சனைதான் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இளையோருக்கு வேலை இல்லாமல் இருப்பது பாரிய பிரச்சனையாக உள்ளது. பெரியதோர் அணு குண்டு விழுந்து வெடித்ததைப் போல இந்த வேலையில்லாத் திண்டாட்டம் அகோரமாக உள்ளது. உலகப் பொருளாதார மந்தம் நடைபெறும் காலத்தில் புரட்சியை செய்துவிட்டு வேலையற்று நிற்கிறார்கள் இளைஞர்கள். இதுமட்டுமல்லாமல் இதுபோல 56 நாடுகளில் இளைஞர் வேலையின்மை பாரிய பிரச்சனையாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. இன்று 15 – 24 வயதிற்கு இடைப்பட்ட 78 மில்லியன் இளைஞர்கள் உலகம் முழுவதும் வேலையில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மத்தியகிழக்கு மிக மோசமான நிலையில் உள்ளது, அதில் எகிப்து முதலிடம் வகிக்கிறது.

0 கருத்துகள்: