பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியி ன் ஆட்சி நடக்கிறது. ஆசிப்அலி சர்தாரி அதிபராகவும், யூசுப் ரசா கிலானி பிரதமராகவும் பதவி வகிக்கின்றனர் .இந்த நிலையில் ராணுவ புரட்சி மூலம் கிலானி தலை மையிலான ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக தகவ ல் வெளியானது. மேலும் இந்த சதியை தடுத்து நிறுத்து ம்படி அமெரிக்க ராணுவ உதவியை அதிபர் சர்தாரி நாடி யதாகவும் கூறப்பட்டது. இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.தற்போது இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இருந்தும் பாகிஸ்தானில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற வதந்தி பரவியுள்ளது. ஆனால், கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ தலைமை தளபதி அஷ்பாப் பர்வேஷ் கயானியும் உயர் ராணுவ அதிகாரிகளும் விரும்பவில்லை.தற்போது பதவி வகிக்கும் அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2013) வரை உள்ளது. எனவே இந்த ஆட்சி தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்க ராணுவ அதிகாரிகள் விரும்புகின்றனர்.
எனவே பாகிஸ்தானில் ராணுவ புரட்சியோ, அல்லது முன்கூட்டியோ தேர்தல் வராது என கயானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடத்தும் உரிமையை இழந்து விட்டது. எனவே அக்கட்சியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என சில ராணுவ அதிகாரிகள் கருதுவதாகவும் தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக