தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.12

அஜ்மானில் அமீரக நண்பர்கள் சங்கம் துவக்கம்!

அஜ்மானில் அமீரக நண்பர்கள் சங்கம் ஜனவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏசியன் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.சங்கத்தினை அமீரக நண்பர்கள் சங்க தலைவர் ராசிபுரம் ஜெ. மனோகர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலாளர் கரூர் எம். சசிகுமார், பொருளாளர் கள்ளக்குறிச்சி நாகலூர் எம். வேல்முருகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக அமீரக செய்தியாளர்
முதுவை ஹிதாயத் கலந்து கொண்டார். நாமக்கல் கே.

அழகுராஜ் தலைமையில் வாழச் சிறந்த்து தாய்நாடா? வெளி நாடா? எனும் தலைப்பில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.

கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்வினை கண்ணிவாடி இ. நாகராஜபாண்டியன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் அமீரக நண்பர்கள் சங்க அங்கத்தினர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 கருத்துகள்: