சி.ஐ.ஏ உளவாளிக்கு ஈரானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.வுக்கு உளவு பார்த்ததற்காக ஹெக்மாட்டி என்பவருக்கு ஈரான்
நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
ஹெக்மாட்டியும் சி.ஐ.ஏ.வுக்கு உளவுபார்த்ததை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார். இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டோமி வீடர் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது உண்மையானால் அது கண்டனத்திற்குரியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், கண்டனம் தெரிவிக்கவும் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக