ஈரான் அணு குண்டை உருவாக்குகிறது என்ற விவ காரம் பெரும் சூடுபிடித்து, போருக்கான மேகங்கள் சூ ழ்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலை யில் இன்று புதன் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானி தெ கிரானில் வைத்து கார்க் குண்டு வெடிப்பில் கொல்ல ப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெகிரானுக்கு வடக் கே உள்ள பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த கார்க் குண்டு வெடிப்பில்
அணுச க்தி விஞ்ஞானி முஸ்தாபா அகமடி றொஸ்கான்
கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு அருகில் இருந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவருடைய இழப்பு ஈரானின் அணு குண்டு உருவாக்க முயற்சியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. அதேவேளை இந்த படுகொலைக்குப் பின்னால் இஸ்ரேலிய உளவுப்பிரிவான மூஸாட்டும், அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏயும் இணைந்து தொழிற்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை அமெரிக்க மரைன் படைப்பிரிவில் பணியாற்றிய அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஈரானிய இளைஞர் ஒருவருக்கு உளவாளி பட்டம் சுமத்தி மரணதண்டனை விதித்தது ஈரான். இந்த விவகாரம் நேற்று முன்தினம் இரு நாடுகளுக்கும் இடையே பாரிய முறுகலாக தணல் மூட்டியிருந்தது. இப்போது ஈரானிய விஞ்ஞானி பலி எடுக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாயுள்ளது. எவ்வாறாயினும் இந்த முறுகல் தப்பான பாதையில் சுழல ஆரம்பித்துவிட்டது கவனிக்கத்தக்கது. சற்று முன்னர் வெளியான ஈரானின் உதவிப் பிரதமரின் அறிக்கை இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கை இதுவென்று அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் மேலை நாடுகளின் உளவுப்பிரிவுகள் சம்மந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஈரானின் அணு குண்டு உருவாக்க விஞ்ஞானிகள் கொல்லப்படுவது இதுதான் முதல் தடவையல்ல, கடந்த 2010 நவம்பர் மாதம் அற்றோம் எனர்ஜி இன்ஜினியர் ஒருவர் இதேபோல கொல்லப்பட்டுள்ளார். ஆகவே மோஸாட்டின் அறிவியல் கொலைகளை ஈரான் சொந்த நாட்டிலேயே சந்திக்க நேர்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இந்த நிகழ்வு ஈரானின் அணுசக்தி பணிகளில் யாதொரு பின்னடைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று ஈரான் அறிவித்தது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக