தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.1.12

கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், எஸ்டிடி பூத்களில் ரயில் டிக்கெட்களை விற்கும் திட்டம் அமுல் ?


மும்பையில் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், எஸ்டிடி பூத்களில் நீண்ட தூரம் மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்களைவிற்கும் திட்டம் அமலுக்கு வருகிறது.மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு எப்போதும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக, ஸ்மார்ட் கார்டு மற்றும் ரயில் டிக்கெட் கூப்பன்களை ரயில்வே அறிமுகப்படுத்தியது. அப்படியும் கூட்டம் குறையவில்லை.

இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள 100 ரயில் நிலையங்களுக்கு அருகில் 96 ரயில் டிக்கெட் வியாபாரிகளை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. கடைகள்,ரீசார்ஜ் சென்டர்கள் மற்றும் எஸ்டிடி பூத் வைத்திருப்பவர்களுக்கு இதற்காக லைசென்ஸ் கொடுக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மத்திய ரயில்வே ஏற்கனவே பெற்றுள்ளது. ஜன்சதாரன் டிக்கெட் புக்கிங் சேவக் என்ற திட்டத்தில் இது அமல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தில் சேர 150 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 96 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த மூன்று மாதத்தில் தங்கள் இடத்தில் ரயில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை தொடங்குவார்கள். இதற்குஸீ 1.5 லட்சம் செலவாகும்.

இந்த கடைகளில் புறநகர் டிக்கெட், மாதாந்திர பாஸ், புறநகர் ரயில் பாஸ் புதுப்பித்தல் மற்றும் நீண்ட தூர ரயிலுக்கான முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை வாங்க முடியும்.

இதற்கு ஒரு டிக்கெட்டுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்து கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது.நீண்ட தூர ரயிலுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை பயண தினத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பே எடுத்துக் கொள்ள முடியும். ஏற்கனவே, இதுபோல் ஏற்கனவே 82 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 96மையங்கள் திறக்கப்பட இருக்கின்றன. இங்கு வாங்கிய டிக்கெட்டு களை ரத்து செய்ய முடியாது.

0 கருத்துகள்: