தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.12.11

விக்கிலீக்ஸுக்கு தகவல்களை கசிய விட்ட அமெரிக்க இராணுவ வீரர் நீதிமன்றில்

ஜூலியன் அசாஞ்சேவின் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தி ற்கு அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை வழ ங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ள பிராட்லி மானிங் என்ற அந்நாட்டின் இராணுவ உளவுத்துறை பகுப் பாய்வாளார், முதல் முறையாக நீதிமன்றத்திற்கு அழைத்து ச் செல்லப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கி ன்றன.அமெரிக்கா இராணுவ வழக்கறிஞர்கள் பிராட்லி மானிங்க்குக்கு எதிராக பல குற்றச்சா

ட்டுக்களை சுமத்தியுள்ளனர். இவற்றின் விசாரணைக்கென கடந்த வெள்ளியன்று முதல் முறையாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


எதிரிகளுக்கு அரசின் இரகசியங்களை கசியவிட்டமை உட்பட 22 குற்றங்களில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் பிராட்லி. இவை நிரூபிக்கப்பட்டால் அதிக பட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என தெரியவருகின்றது.

பொது நலைனை கருத்தில் கொண்டு இவரை விடுவிக்க வேண்டுமென மானிங்க் தரப்பால் வாதிடப்பட்ட போதும், அரச இரகசியங்களை கசிய விடுகின்றமை கடுமையான குற்றம் என அரசு தரப்பில் வாதிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மானிங்குக்கு ஆதரவாக நீதிமன்றின் வெளியே சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பிராட்லி ஒரு காவலர் அவர் ஒரு ஹீரோ அவரை விடுதலை செய்ய வேண்டுமென அவர்கள் கோரியதாக தெரியவருகின்றது.

0 கருத்துகள்: