தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.12.11

இந்தியா-ரஷியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

மாஸ்கோ. டிச. 17-  இந்தியா-ரஷியா இடைய 5 ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின. ரஷியா சென்றுள்ள பிரதமர் மன் மோகன்சிங், ரஷிய ஜனாதிபதி மெத்வதேவுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.இருவருடைய பே ச்சு வார்த்தைக்குப்பின் இந்தியா-ரஷியா இடையே ராணு வம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்பட பல்வேறு துறை களில் 5
முக்கியஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உலகின் வருங்கால சவால்களை சமாளிக்கும் விதத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தான் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் அரசியல் நிலவரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். பின்னர் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு, ஈடு இணையற்றது என்றும், வேறு எந்த நாட்டுடனும் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு விசேஷமானது-தனி மரியாதை கொண்டது என்றும் புகழாரம் சூட்டினார். அவர் மேலும் கூறியதாவது:-
இரு நாடுகளுக்கும் உள்ள ராணுவ ஒத்துழைப்பின் தரம் புதிய அளவை எட்டியுள்ளது. எண்ணெய், எரிவாயு, தொலைத் தொடர்பு, மருந்து உற்பத்தி, உரம், சுரங்கம், விஞ்ஞான தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு துறைகளிலும் புதிய கவனம் செலுத்த இருக்கிறோம்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தீவிரவாதத்தில் இருந்து உலக நாடுகளைப் பாதுகாப்பது, கடல் கொள்ளையர், போதை மருந்து கடத்தல் போன்ற பிரச்சினைகளில் இரு நாடுகளும் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.
விரிவாக்கப்படும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்குவதற்கு ரஷியா தனது உறுதியான ஆதரவை தெரிவித்து உள்ளது. மன்மோகன்சிங்குடன் கூட்டாக பேட்டி அளித்தபோது ரஷிய ஜனாதிபதி மெத்வதேவ் இந்த ஆதரவை தெரிவித்தார். "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா மிகவும் வலுவான ஒரு வேட்பாளர் என்பதில் ரஷியாவின் பலமான ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று அவர் கூறினார்.
"தற்போது எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்" என்றும் மெத்வதேவ் கூறினார். கடந்த 2011 ஜனவரி 1-ந் தேதி அன்று இந்தியா தற்காலிக உறுப்பினராக கவுன்சிலில் இணைந்தது முதல் இரு நாடுகளும் அளித்த பங்களிப்பு திருப்திகரமாக இருந்ததாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கடற்படைக்கு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பலை 10 ஆண்டு கால குத்தகைக்கு ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு ரஷியா வழங்க உள்ளது. 'அகுலா-2' ரகத்தைச் சேர்ந்த நெர்பா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் இந்தியாவிடம் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் இந்த கப்பல் ஐ.எம்.எஸ். சக்ரா என்று அழைக்கப்படும். பல மாதங்கள் நீரில் மூழ்கி இருக்கக்கூடிய இந்த கப்பல் 28 அணுசக்தி ஏவுகணைகளை 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை ஏவி தாக்குதல் நடத்த முடியும்.

0 கருத்துகள்: