தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.11

நீதிமன்றில் இருந்து ஓடியவரை போலீஸ் நாய் கவ்விப்பிடித்தது


ஒல்போ நீதிமன்றில் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் இருந்து தலைதெறிக்க ஓடி மறைந்துவிட்டார். ஓடினாலும் ஓடியவர் ஒரு கோட்டலில் புகுந்து தாகம் தீர்க்க முயன்றார். இந்த நேரம் சிவில் உடையில் தாகசாந்தி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் மேற்கண்ட நபரை முன்னரே அறிந்திருந்த காரணத்தால் போலீசாருக்கு போன் செய்தார். மூன்று வாகனங்களில் மோப்ப நாய்கள் சகிதம் வந்த போலீசார்
நாய்களை ஏவிவிட, கதறியபடி ஓடிய இளைஞரை மோப்பநாய் ஒன்று வசமாக கவ்விப்பிடித்தது. தமது நாயின் வீர சாகசத்தை போலீசார் மெச்சியுள்ளனர். இப்போது இளைஞர் கம்பி எண்ணினார்.
இது இவ்விதமிருக்க டென்மார்க்கில் வழங்கப்படும் ஸ்ராட் ஜெல்ப் ஒருவருக்கு வாழ்வதற்கு போதுமான தொகையே என்று றொக்வூல் ஆய்வு நிறுவன அதிகாரி ஜோக்கிம் ஊல்சன் தெரிவித்தார். கோட்டலில் வாங்கி உண்பதைவிடுத்து சமைத்து சாப்பிட்டால் இப்பணத்துடன் ஒரு மாத காலத்தை ஓட்டலாம் என்றும் அவர் கூறினார். ஸ்ராட் ஜெல்ப் வழங்கப்படுவோருக்கு வீட்டு வாடகையும் வழங்கப்படுவதால் அவர்கள் வாழ்வது கடினமெனக் கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: