தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.11

சவுதி அரேபியாவில் இலங்கை, இந்தியாவை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை தீர்ப்பு?


சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைசம்பவம் ஒன்றுக்காக இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு சிரச்சேதம் மூலம் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஒருவரை, அவரது வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு, அவரது வீட்டில் கொள்ளையடித்து சென்றதாக
இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொலையில் தொடர்புடையதை ஒப்பு கொண்டதன் பின்னர் இத்தீர்ப்பு வழங்கப்படுவதாக சவுதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜித்தா பொது நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுவினர் இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

மரணதண்டனை எதிர் நோக்கியுள்ளவர்கள் கயான், இஸ்க் மற்றும் பர்ஷான் எனும் மூவராவர்கள். இவர்களை தவிர அஷ்ரப், குமார், ரஜீஸ், ரங்கீத், மொஹ்மட் கொனா  எனும் நபர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை மற்றும் 1000 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மாத்திரமல்லாது யுவதிகளும் இதில் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: