தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.12.11

கிருஸ்தவ தேவாலயத்தில் 20.000 பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகம்

ஹோலந்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சுமார் 20.000 மேற்பட்ட சிறு பிள்ளைகள் குறிக்கப்பட்ட காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட் டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளன. கிருஸ்தவ  சமய வேடமணிந்து நடைபெற்றுள்ள பாலியல் துஷ்பிர யோகங்களில் இது அதிக உச்சக்கட்ட தவறு என்றும் தெ ரிவிக்கப்படுகிறது. 1945 – 1981 வரை நடைபெற்ற பாலிய ல் துஷ்பிரயோகங்களை ஒன்று
திரட்டியபோது 10.000 முதல் 20.000 பிள்ளைகள் இவர்களால் சீரழிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இவைகளில் கூடுதலானவை தேவாலய தங்குமிடங்கள், தேவாலயத்திற்கான பிள்ளைகள் இல்லங்களில் அரங்கேறியுள்ளதாக அந்த பக்கச்சார்பற்ற அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கை கொலன்ட் சமூகவியலாளரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ பத்துக்கு ஒரு பிள்ளை என்ற அடிப்படையில் இந்தத் துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இந்த அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட கொலன்ட் ஆர்க்பிஷப் இது கவலை தரும் நிகழ்வு என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டிய தேவை தேவாலயப் பிரிவுக்கு உள்ளதாக அசோசியட் செய்தி தாபனம் தெரிவிக்கிறது.

0 கருத்துகள்: