பெரியார் திராவிட கழக தலைவர் டி.எஸ்.மணி சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
1968-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ஒரு உத்தரவில், அரசு அலுவலகங்களில் மத தொடர்பான சிலைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. பிறகு 1993-ல் தமிழக அரசு வெளியிட்ட ஒரு உத்தரவில் மத வழிபாடு தொடர்பான எந்த புதிய கட்டிடங்களையும் அரசு அலுவலகங்களில் கட்ட கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
அரசு அலுவலகங்களில்
இதை மீறி செயல்பட்டால் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அலுவலகங்களிலும், போலீஸ் நிலையங்களிலும் ஆயுதபூஜை கொண்டாடுகிறார்கள். அதை தடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹரிபரந்தாமன், அக்பர் அலி ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு மீது அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீசு அனுப்பும் படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக