தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.10.11

தேர்தல் புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரம் இயங்கும் புகார் மையங்களுக்கு இலவச தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்மாதிரியாக அமைவதற்கு பல்வேறு பணிகள், சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. அமலில் உள்ள நன்னடத்தை விதிகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணித்து மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவுரையின்படி, மாநில தேர்தல் அணைய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து புகார்களை பெறுவதற்கு வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உள்பட 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புகார்களை கீழ்கண்ட இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இலவச தொலைபேசி எண்கள்: 18004257072, 18004257073, 18004257074 மற்றும் 24753001, 24753002 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். தேர்தல் குறித்து அளிக்கப்படும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு உரிய அலுவலர்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: