கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் நேற்றிரவு காந்திநகரில் கைது செய்யப்பட்டார். பிறகு அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதனையடுத்து சஞ்சீவ் பட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பட் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார். இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. உடனே அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டு குஜராத் போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக