தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.10.11

தகவல் அறியும் சட்டத்தின் மறு ஆய்வு யோசனைக்கு அருணா ராய் கடும் எதிர்ப்பு


தகவல் அறியும் சட்டத்தின் (RTI) கூறுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென பிரதமர்
மன்மோகன் சிங் தெரிவித்துள்ள யோசனைக்கு தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் அருணா ராய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இச்சட்டத்தினால் அரசாங்கத்தின் சில பிரிவுகளில் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதையும்,
அரசாங்கத்தின் திறன் தாமதப்படுவதாகவும் பிரதமர் கூறியவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தகவல் அறியும் சட்டம் இதனை தாமதப்படுத்தவில்லை. அரசின் மீதான மோசடி முறைகேடுகளே தாமதப்படுத்துகிறது.

இச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது, வெளிப்படையான சட்டத்தை வலுவிழக்க செய்துவிடும். பொதுமக்களின் நலனை பார்ப்பதை விட தகவல் பெறும் உரிமை ஆர்வலர்களின் வாழ்க்கை பிரச்சினையை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா அதன் வெளிப்படையான இச்சட்ட அமலாக்கல் மூலம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார். கோவாவில் நடைபெற்ற அரசு மற்ரும் பங்கேற்பு ஜனநாயகம் சார்ந்த ஒரு கருத்தரங்கில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தகவல் அறியும் சட்டம் தொடர்பில், பிரதமர் நேற்று விடுத்திருந்த தகவலில், 
தகவல் அறியும் உரிமை சட்டத்தினால் நேர்மையான ஊழியர்கள் பாதிக்கப்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தில் உள்ள சில பிரிவுகள் இந்த சட்டத்தினால் தங்கள் பணிகளுக்கு இடைழூறு ஏற்படுவதாக தெரிவித்து இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படும். இந்த சட்டத்தில் இருந்து எதற்கெல்லாம் விலக்கு அளிப்பது என்பது பற்றி தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
என கூறியிருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானியும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அருணா ராயும் இப்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: