தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.10.11

இத்தாலியில் வெடித்தது பொருளாதார போராட்டம் 70 பேர் படுகாயம்


வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் மாட்டுண்டுள்ள இத்தாலிய அரசு பாரிய பொரளாதார மீதம் பிடித்தல்களை கொண்டுவர இருப்பது தெரிந்ததே. இந்த மீதம் பிடிப்புக்கள் ஏழைகளை பரம ஏழைகளாக்கி முதலாளிகளை மேலும் முதலாளிகளாக்கும் மோசமான கொள்கை சார்ந்தது என்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் இத்தாலி ரோம் நகரில் வெடித்து மோசமான புள்ளிக்கு திரும்பியது. நேற்று நடைபெற்ற ஆர்பாட்டங்களில் சுமார் 70 பேர் காயமடைந்து
பல்வேறு வைத்தியசாலைகளிலும்
அனுமதிக்கப்பட்டார்கள். ஆர்பாட்டக்காரரில் ஒரு பகுதியினர் இத்தாலி பாதுகாப்பு அமைச்சுக்கு பக்கத்தில் உள்ள கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தினார்கள். இதன் தீக்கங்குகள் சன்னல் வழியாக வளர்ந்து கூரையைத் தொட்டது. இதுபோல பல்வேறு அமைச்சகங்களுக்கும் முன்னால் மக்கள் ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள். இந்த ஆர்பாட்டங்கள் தற்போது இத்தாலிய அரசுக்கு எதிராக சூல் கொண்ட மேகமாக திரும்பியுள்ளது. இதேபோன்ற ஆர்பாட்டங்கள் கிரேக்கத்திலும் தற்போது நடைபெறுகின்றன. பொதுத்துறைகயில் வேலை நீக்கம், ஏழைகளுக்கான சலுகைகள் குறைப்பு, சமுதாய நலவாழ்வை விட பொருளதார வளர்ச்சிக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் யூரோ சோன் நிதியம் வழங்கப்படுகிறது. இது அப்பட்டமான முதலாளித்துவ கொள்கை வளர்ப்பு திட்டம் என்று கூறி மக்கள் களமிறங்கியுள்ளார்கள். மக்கள் பாரிய விழிப்படைந்துள்ளது போராட்டங்களின் போக்கில் தெரிகிறது.

0 கருத்துகள்: