தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.11

எதிர்த்தவர்களை கொலை செய்ய கடாபி தயங்கியது இல்லை கேரள டாக்டர்


லிபியா சர்வாதிகாரியாக இருந்த கடாபி, தன்னை எதிர்த்தவர்களை கொடூரமாகக் கொன்று குவிப்பதற்கு ஒருபோதும் தயங்கியது இல்லை, என அவருக்கு சிகிச்சை அளித்த இந்திய டாக்டர் முண்டால் அப்துல்லா கூறியுள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை
சேர்ந்தவர் டாக்டர் முண்டால் அப்துல்லா. இப்போது இவருக்கு வயது 70. கடந்த 1973ம் ஆண்டில் இவர் உள்பட 17 டாக்டர்களை கடாபிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க லிபிய அரசு நியமித்தது.
கடாபியின் பிறந்த ஊரான கிர்தேவில் கிளினிக் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது. அதன்பின்னர் கடாபி அவ்வப்போது கிளினிக் வந்து சிகிச்சை பெற்றுள்ளார். மிகவும் நட்பாக பழகிய கடாபி மீது டாக்டர் அப்துல்லாவுக்கு முதலில் நல்ல எண்ணம் வந்தது.
ஆனால் சர்வதிகார ஆட்சியில் மாணவர்களையும், தன்னை எதிர்க்கும் மக்களையும் அவர் பொது இடங்களில் தூக்கிலிட்டும், சித்ரவதை செய்தும் கொன்றதை பார்த்து மனம் மாறியுள்ளார் அப்துல்லா. கடந்த 1973 ஆண்டு சிர்தே அருகே உள்ள அபு ஹதி என்ற நகரில் கிளினிக் வைக்க அனுமதி பெற்றோம்.
அப்போது தலைவலிக்கு சிகிச்சை பெற கடாபி என கிளினிக்கு வந்தார். அவருக்கு மாத்திரை, மருந்துகள் கொடுத்தேன். என்னிடம் சிகிச்சை பெற்ற பின்னர் தலைவலி நின்றதால் ஒரு இந்திய டாக்டர் என் பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டார் என்று தனது மனைவியிடம் என்னை பற்றி பாராட்டி பேசினார் கடாபி.
என்னையும், என் மனைவியையும் சிர்தேவில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். அதிபர் என்ற கர்வம் இல்லாமல் அவரே டீ, ஸ்நாக்ஸ் கொண்டு வந்து பறிமாறினார்.
பழகுவதற்கு எளிமையாக இருந்தாலும், தன்னை எதிர்த்தவர்களை கொடூரமாக கொன்று குவிப்பதற்கு கடாபி தயங்கியது இல்லை. எந்த நேரத்திலும் தன்னை எதிரிகள் கொலை செய்து விடுவார்கள் என்ற பயம் அவருக்கு இருந்தது,” என்று கடாபி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

0 கருத்துகள்: