தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.11

துருக்கியில் கடும் நிலநடுக்கம்!


துருக்கியின் கிழக்கு பகுதிகளில் நேற்று நண்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்,
பல கட்டிடங்கள் இடிந்து வீழ்துள்ளன. 7.2 மேக்னிடியூட் அளவில், பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தினால் இதுவரை 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கியின்
வட கிழக்கு நகரான Van கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு கட்டிடங்கள் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துருக்கி பிரதமர் ரெசெப் டையிப் எர்டோகன், அந்நகரில் அவசரநிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

துருக்கியில் கடந்த 1999ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7 பேர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: