தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.11

கூடங்குளம் அணுஉலை விகாரம்:அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி - உண்ணாவிரதம் தொடர்கிறது.


கூடங்குளம் அணுஉலை பிரச்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிரலையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் செப்.11ல் இருந்து 
பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
பெண்கள் உள்பட 127 பேர் இன்றும் 5வது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், அவர்களுடன்  அமைச்சர்கள் நெல்லை செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி செல்லப்பாண்டியன், சண்முகநாதன், நெல்லை கலெக்டர் செல்வராஜ் ஆகியோர் இன்று சென்றனர். ராதாபுரம் சுற்றுலா மாளிகையில்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அணுஉலையில் மின் உற்பத்தியை துவக்க கூடாது என தமிழக அரசு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு அமைச்சர்கள் சம்மதிக்கவில்லை. முதல்வர் ஜெயலலிதாவை போராட்ட குழு பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய கேட்டனர்.  அதையும் முதல்வரிடம் கேட்டுத்தான் சொல்லமுடியும். குறைந்தது ஒரு வாரம் ஆகும் என கூறினர்.
தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்பதை இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் நேரடியாக வந்து சொல்லுமாறு கேட்டனர். அதற்கும் அமைச்சர்கள் முடியாது என்றார்கள். முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் இப்போதைக்கு உண்ணாவிரதத்தை முடிக்குமாறு அமைச்சர்கள் கேட்டனர். அதற்கு போராட்ட குழு பிரதிநிதிகள் சம்மதிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அரசு முடிவெடுக்கும் வரையிலும் உண்ணாவிரதம் தொடரும் என கூறி ,உண்ணாவிரத்தை தொடரப் போவதாக தெரிவித்தனர். இந்தத் தொடர் உண்ணாவிரதம் நாளை ஆறாவது நாளாகவும் தொடரவுள்ளது எனத் தெரிய வருகிறது.

0 கருத்துகள்: