தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.9.11

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி! முஸ்லிம் லீக்


உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
இது குறித்து கூட்டணிக் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது தோழமைக் கட்சிகளுடன் ஆலோசிக்காமலேயே உள்ளாட்சித் தேர்தலி்ல் திமுக தனித்துப் போட்டியிடும் என்ற முடிவை அக்கட்சியின் தலைவர்
கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் என்றார்.

மேலும் அவர் பேசியபோது கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் திமுக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் உள்ளாட்சி தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்தந்த நகர, மாநகர, மாவட்ட நிர்வாகிகளுக்கு அந்தந்த பகுதியில் யாருடன் கூட்டணி அமைத்துக் கொள்வது என்பது குறித்து முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளுடன் பேசி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். இன்னும் ஒரு சில தினங்களில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெற உள்ளது என்றார்.

0 கருத்துகள்: