ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயுர்வேத மசாஜ், பியூட்டி பார்லர் சென்டர் மற்றும் அழகு கலை நிபுணர் என்ற பெயரில், சென்னையில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு புகார்கள் வந்தன.
மசாஜ் செண்டர் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, பாலியல் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் வந்தன.
இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர் போல் நுழைந்து நடத்திய வேட்டையில் மணிப்பூர்,
கேரளா, ஆந்திரா மற்றும் சென்னை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மசாஜ் சென்டரின் பொறுப்பாளர் அஜீஸ்குமார் தாஸ், உரிமையாளர் ரேணுகா (எ) பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
‘ஆயுர்வேத மசாஜ்’ என்ற பெயரில் பாலியல் தொழில் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டும் 12 புரோக்கர்கள் சிக்கினர்
கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் நடந்த அதிரடி வேட்டையில், பாலியல் புரோக்கர்களான தேனி குமார் என்ற காதல் குமார், மதுரை கவுசிக், ஆந்திரா லட்சுமணன், சூளைமேடு ஆனந்த், கேரளா ராஜீவ் குமார், ரஞ்சித்தேவ், சென்னை ஆர்.ஏ.புரம் ஜெகன்மோகன் ராவ், வேளச்சேரி மகாலட்சுமி, கே.கே.நகர் பாண்டிச்சேரி ராணி, வடிவேல், வடபழனி இக்பால் ஹரீஷ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக