இங்கு உலகிலேயே விலை உயர்ந்த செல்போன்களில் முதல் ஐந்தினை பட்டியலிட்டுள்ளோம்.
1. ஸ்டூவர்ட் ஹக்ஸ் ஐபோன் 4
செல்போனுக்காக எவ்வளவு பணம் வேண்டுமானலும் செலவழிக்கத் தயார் எனக் கூறுபவர்களே, இதனை வாங்கமுடியும். பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஸ்டூவர்ட் ஹக்ஸ் எனும் வடிவமைப்பாளரின் படைப்பான ஐபோன் 4 உலகின் விலை உயர்ந்த போன்களில்
முதல் இடத்தை பிடித்துள்ளது. இவரது படைப்புகள் அனைத்தும் விலை உயர்வுக்காகவே மிகவும் பிரபலம். இதன் விலை 8 மில்லியன் அமெரிக்க டாலர். போனின் பக்கவாட்டில் 500 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் சின்னம் மட்டும் ரோஸ் கோல்டு மற்றும் 53 வைரக்கற்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவரை இரண்டு போன்களே தயாரிக்கப் பட்டுள்ளன.
2. கோல்ட் ஸ்டிரைக்கர் ஐபோன் 3 ஜிஎஸ்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் தயாரித்த இந்த ஐபோன், 136 வைரக்கற்கள் மற்றும் தங்கம் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 3.2 மில்லியன் அமெரிக்க டாலர். முன்பக்கத்தில் 7.1 காரட் பெரிய வைரம் பதிக்கப்பட்டுள்ளது.
3. பீட்டர் அலொசன்ஸ் கிங்ஸ் பட்டன் ஐபோன் 3 ஜிஎஸ்
18 காரட் எல்லோ கோல்டினால் செய்யப்பட்ட இந்த ஐபோன், 138 வைரக்கற்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 6.6 காரட் பெரிய வைரம் பதிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்.
4. கோல்ட் விஷ் லெ மில்லியன் பீஸ்
எம்மானுவேல் என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்த போன் ஒயிட் கோல்டினால் செய்யப்பட்டது. போனைச் சுற்றிலும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்.
5. டைமண்ட் க்ரிப்டோ ஸ்மார்ட் போன்
பீட்டர் அலொசன்ஸின் மற்றொரு படைப்பு, பிளாட்டினம் கொண்டு செய்யப்பட்டது. போனைச் சுற்றிலும் 50 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ரோஸ் கோல்ட் கொண்டு சில பாகங்கக் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக