தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக
தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்த தியாகச் செம்மல்கள் நிறைந்திட்ட மாநிலம் நம் தமிழகம். வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமையும் பெற்றது நம் தமிழகம். நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களைக் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அந்தத் தியாகச் செம்மல்களை நினைவு கூறும் திருநாள் இது என்றும் ஜெலலிதா கூறினார்.
அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, வறுமையில் வாடுவோர் வளம் பெற்று, அனைத்துத் தரப்பு மக்களும் அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம். அந்த வகையில், இந்த சுதந்திரத் திருநாள், தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் தன்னிகரில்லாத் திருநாள். தமிழக மக்களின் முகங்களில், ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியை காண்கின்ற திருநாள். 64 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை இன்று கொண்டாடி மகிழும் அதே வேளையில், தங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிமைப்படுத்தி இருந்த விலங்கு தற்போது தகர்த்தெறியப்பட்டுள்ளதைத் தமிழக மக்கள் உவகையுடன் கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு துறையிலும் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையே அச்ச உணர்வில் தான் கழிந்தது. எனவே தான், ஐந்து ஆண்டு கால கொடுங்கோல் குடும்ப ஆட்சி ஒழிந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களாட்சி மலர்ந்தவுடன், மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்த உணர்வு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை சட்டம்-ஒழுங்கு சீரழிவு. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக் காடாக மாற்றினார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இதனை சீர்செய்யும் விதமாக சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், நிருவாகத்தை செம்மையாக்கவும் எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் முதல்வர் கூறினார். நன்றி: இந்நேரம்.காம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக