தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.8.11

இளைஞரை சுட்டுக்கொன்ற வழக்கில் பாக்.ராணுவ வீரருக்கு மரணத்தண்டனை


கராச்சி:நிராயுதபாணியான இளைஞர் ஒருவரை திருடர் என குற்றம் சாட்டி சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதர ஆறு ராணுவ வீரர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் பத்திரிகையாளர் ஒருவரின் சகோதரரனான ஸர்ஃப்ராஸ் ஷா(வயது 18) கொல்லப்பட்ட வழக்கில்தான்
கராச்சி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. முக்கிய குற்றவாளிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், இதர குற்றவாளிகளுக்கு ஒரு லட்சம் வீதம் அபராதமும் விதித்து நீதிபதி பஷீர் அஹ்மத் குஷு தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வருடம் ஜூன் மாதம் 8-ஆம் தேதி ஸர்ஃப்ராஸ் கொல்லப்பட்டார். பெனசிர் பூட்டோ பார்க்கில் கொள்ளை நடத்த முயன்ற இளைஞரை துப்பாக்கியுடன் கைதுச் செய்ததாகவும், விசாரணை செய்யும் வேளையில் ராணுவ வீரரின் துப்பாக்கியை பறிக்க முயன்றபோது சுட்டதாகவும் ராணுவம் கூறியது. ஆனால், எதிர்பாராதவிதமாக வீடியோவில் பதிவுச் செய்யப்பட்ட ஸர்ப்ராஸ் கொலைச் செய்யப்பட்ட காட்சி பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். வெள்ளை ஆடை அணிந்த நபர் ஸர்ஃப்ராஸை பிடித்துச் செல்வது வீடியோவின் முதல் காட்சியாகும். பின்னர் ஸர்ஃப்ராஸ் கைக்கூப்பி மன்னிப்பு கோருகிறார். வெள்ளை ஆடை அணிந்தவரையும், ஸர்ஃப்ராஸையும் தள்ளி மாற்றிய ராணுவம் அருகிலிருந்து ஸர்ஃப்ராஸை சுட்டுக்கொன்றது வீடியோவில் அடுத்த காட்சியாகும்.

0 கருத்துகள்: