நம் கணினியில் மால்வேர்களும்,வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே. நமக்கு தெரியாமலே நம் கணினிக்குள் நுழைந்து (திறந்து வீட்டுக்குள் நாய் நுழைவதை போல ஹி ஹி ) நம்முடைய முக்கிய பைல்களை அழித்து உச்சகட்டமாக நம் கணினியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்முடைய கணினி பாதிக்க பட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.
சில வைரஸ்களை நம் ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களும் தவற விடுகின்றன. பெரும்பாலான வைரஸ்கள் இணையம் மூலமே நம் கணினியில் பரவுகிறது. இந்த நிலையில் மால்வேர்களால் பாதிக்க பட்ட கணினிகளை காட்டி கொடுக்க கூகுள் ஒரு புதிய வசதியை அதன் தளத்தில் புகுத்தியுள்ளது.
- நீங்கள் கூகுள் தளத்திற்கு செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மால்வேர்களால் உங்கள் கணினி தாக்க பட்டிருந்தால் கூகுள் ஒரு எச்சரிக்கை செய்தியை அளிக்கும்.
- இந்த குறிப்பிட்ட மால்வேர்களால் உலகில் சுமார் 2 மில்லியன் கணினிகள் பாதிக்க பட்டுள்ளதாம்.
- இது போன்ற எச்சரிக்கை செய்தி வந்தால் உங்கள் கணினி அந்த மால்வேரால் பாதிக்க பட்டுள்ளதாம்.
- அதை தீர்ப்பதற்கான வழிமுறையையும் கூகுள் அங்கே கொடுத்துள்ளனர். Learn how to fix this என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் அந்த மால்வேரை நீக்குவதற்கான வழிமுறையை கொடுத்திருப்பார்களாம்.
டிஸ்கி: நண்பர்களே நம்முடைய கனியை பாதுகாப்பது மிகவும் அவசியம் ஆகவே நீங்கள் உபயோகிக்கும் மென்பொருட்களின் வெர்சன்களை அப்டேட் செய்து பயன்படுத்துங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக