தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.11

அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனை:எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஹுர்ரியத் எச்சரிக்கை

புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக பலிகடா ஆக்கப்பட்டு எவ்வித ஆதாரமுமின்றி ‘மக்களின் மனசாட்சியின்(?)’ அடிப்படையில் உச்சநீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை உறுதிச் செய்யப்பட்ட அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனை விதித்தால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹுர்ரியத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஃப்ஸல் குருவுக்காக அவருடைய மனைவி தபஸ்ஸும் சமர்ப்பித்த கருணை மனுவை நிராகரிக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன் தினம் குடியரசு
தலைவரிடம் அறிவித்துள்ளது.
அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உருவாகும் எந்தவொரு எதிர்விளைவுகளின் பொறுப்பும் மத்திய அரசுக்குத்தான் என ஹுர்ரியத் தலைவர் மீர்வாய்ஸ் ஃபாரூக் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஃப்ஸல் குருவை தூக்கிலிட்டால் கஷ்மீரில் மோதல் சூழல் பல மடங்காக அதிகரிக்கும். கஷ்மீர் பள்ளத்தாக்கின் நம்பிக்கையை மீட்டெடுக்க பரஸ்பர நல்லெண்ணம் நடவடிக்கைகளை எடுத்து வருவாதாக வாய்ச்சவடால் விடும் அரசு அஃப்ஸல் குருவை கொலைச் செய்வதன் மூலம் எந்த நம்பிக்கையை மீட்டெடுக்கப்போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். அஃப்ஸல் குரு விவகாரத்தில் அரசியல் விருப்பங்களின் வெளியே உள்ள விளையாட்டை பா.ஜ.க கைவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கஷ்மீரின் முக்கிய எதிர்கட்சியான பீப்பிள்ஸ் டெமோக்ரேடிக் பார்டி(பி.டி.பி) மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது. தூக்குத்தண்டனையை நடைமுறைப்படுத்தும் முயற்சியை கைவிட மத்திய அரசுக்கு பி.டி.பி கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக மோதல் சூழல் காரணமாக கஷ்மீர் சந்தித்த கடுமையான நிலைமையை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். தீவிரவாதத்துடன் கடுமையான எதிர்ப்பை கையாளும் வேளையில் தேசிய விருப்பங்களை முன்னிறுத்தி அஃப்ஸல் குருவின் விவகாரத்தில் அரசு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும். தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் மக்களின் நம்பிக்கை தகர்ந்துபோகும். கஷ்மீர் மக்களை இந்தியாவிடமிருந்து இந்நடவடிக்கை மேலும் அகற்றும்.
முக்கிய அரசியல் கட்சியான காங்கிரசும் இவ்விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. உள்துறை அமைச்சகம் கைக்கொண்ட நிலைப்பாட்டை குடியரசு தலைவர் ஒப்புக்கொள்ள தேவையில்லை என காங்கிரஸ் செயலாளர் பிரவீன் தாவர் தெரிவித்துள்ளார். இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் முன்பு எல்லா அம்சங்களையும் விரிவாக மதிப்பீடுச்செய்ய அரசு தயாராகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பா.ஜ.கவின் கடுமையான நிர்பந்தத்தை தொடர்ந்து மரணத்தண்டனையை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் அரசு அவசரம் காட்டுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு சரியில்லை என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியுள்ளார்.
பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மரணத்தண்டனையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

0 கருத்துகள்: