தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.11

சட்டவிரோத குடியேற்ற நிர்மாணம்: இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா

வாஷிங்டன்:ஆக்கிரமிப்பு ஃபலஸ்தீனில் 1600 சட்டவிரோத வீடுகளை கட்டுவதற்கு அனுமதி வழங்கிய இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை ஐ.நா விமர்சித்துள்ளது.

இஸ்ரேலின் இந்நடவடிக்கை உணர்ச்சியை தூண்டும் எனவும், சமாதான நடவடிக்கைகளை மீண்டும் துவங்குவதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை பலவீனப்படுத்தும் எனவும் மேற்காசியாவின் ஐ.நாவிற்கான சிறப்பு தூதர் ரோபர்ட் ஸெரி கூறியுள்ளார்.

வீடு கட்டும் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட உடனேயே சர்வதேச அளவில் கண்டனம் எழுந்ததாக ஸெரி சுட்டிக்காட்டினார். கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் உள்துறை அமைச்சகம் கிழக்கு ஜெருசலத்தில் சட்டவிரோதமாக வீடுகளை கட்டுவதற்கு அனுமதி அளித்தது. வரும் நாட்களில் மேலும் 2700 வீடுகளை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என செய்திகள் கூறுகின்றன.

0 கருத்துகள்: