தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.11

கிட்னி திருடினால் 10 ஆண்டு ஜெயில், ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு

புதுடெல்லி, ஆக. 14-  சில ஆண்டுகளுக்கு முன் சென்னை, கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கிட்னி போன்ற உடல் உறுப்புகள் திருட்டு நடைபெற்றது. 
 
கிட்னி பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஏழைகளை பண ஆசை காட்டியும், ஏமாற்றியும் அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டன. சம்பந்தப்பட்ட நபரின் விருப்பம் இல்லாமல் இவ்வாறு உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதை நோயாளிகளுக்கு பொருத்துவது சட்ட விரோதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை தடுக்க ஏற்கனவே சட்டம் உள்ளது. 
 
என்றாலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பாராளுமன்ற நிலைக் குழு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இருந்தது. அதை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக் கொண்டுள்ளது. 
 
இதையடுத்து சட்ட விரோத உடல் உறுப்புகள் விற்பனையை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் நேற்று சட்டம் கொண்டு வரப்பட்டது. சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் இந்த சட்டத்தை தாக்கல் செய்தார். பின்னர் எம்.பி.க்கள் ஆதரவுடன் சட்டம் நிறைவேறியது. 
 
இந்த புதிய சட்டம் கிட்னி திருட்டு போன்ற சட்ட விரோத உடல் உறுப்புகள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்க வகை செய்கிறது. மேலும் உடல் உறுப்புகள் தானம் செய்வது, அதை பாதுகாத்து வைத்தல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை முறைப்படுத்தவும் சட்டம் வகை செய்கிறது. 
 
இந்த சட்டம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும், ஏழைகளை ஏமாற்றி உடல் உறுப்புகள் மோசடியில் ஈடுபடுவோரை தண்டிக்கும் என்றும் மத்திய மந்திரி குலாம் நபி 

0 கருத்துகள்: