தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.7.11

பிரஞ்சு கப்பல் இன்று காஸ்ஸா வந்தடையும்


பாரிஸ்:இஸ்ரேலின் அநீதமான தடையினால் அவதியுறும் காஸ்ஸா மக்களுக்கு உதவி அளிக்க கிரீஸிலிருந்து புறப்பட்ட பிரான்சு நாட்டு நிவாரண கப்பல் இன்று காஸ்ஸா முனையை வந்தடையும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ’டிக்னைட் அல்கராமா’ என்ற உதவிக்கப்பல் க்ரீஸில் காஸ்டலோரிஸா தீவிலிருந்து புறப்பட்டது. கப்பல் காஸ்ஸாவுக்கு செல்வதை
கிரீஸ் அதிகாரிகள் தடுத்திருந்தனர்.
காஸ்ஸாவுக்கு கடந்த ஆண்டும் துருக்கியிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை இஸ்ரேலிய ராணுவம் அக்கிரமமாக தாக்கி ஒன்பது தன்னார்வ தொண்டர்களை படுகொலைச்செய்தது. இச்சூழலில்தான் ‘டிக்னைட் அல்கராமா’ கப்பலை தடுத்து நிறுத்தியதாக கிரீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
‘டிக்னைட் அல்கராமா’ கப்பலில் ஏழு பிரெஞ்சு குடிமகன்கள் உள்பட 16 பேர் உள்ளனர்.இவர்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் கப்பல் பணியாளர்களும் அடங்குவர். 2006-ஆம் ஆண்டு முதல் காஸ்ஸாவின் மீதான தடையை சியோனிச இஸ்ரேல் தொடர்கிறது. இதற்கிடையே தடையை தாண்டி காஸ்ஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்க சர்வதேச சமூகம் தயாராக உள்ளது.

0 கருத்துகள்: