மும்பையில் கடந்த வாரம் ஒபேரா ஹவுஸ் உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் ஓபரா ஹவுஸில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை
சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரூ 25 கோடி மதிப்பிலான 65 வைரங்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றினர். இந்த வைரங்களின் மதிப்பு ரூ 25 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த வைரங்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மும்பை வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்சய் ஷா தெரிவித்தார். இந்த வைரங்கள் அனைத்தும் வியாபாரத்துக்காக இங்கு வந்த குஜராத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று நம்புவதாகவும், சூரத், பாவ்நகரைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் வைரங்களைக் கொண்டுவந்து மும்பையில் விற்பனை செய்வது வழக்கம் என்றும், இடிபாடுகளுக்குள் மேலும் வைரங்கள் சிதறிக்கிடக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக