தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.7.11

பாகிஸ்தானின் முதல் பெண் மந்திரி 26-ந்தேதி இந்தியா வருகிறார்

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஆக இருந்த ஷாமக மூத் குரேஷி கடந்த பிப்ரவரி 9-ந் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது.
 
இந்த நிலையில் புதிய வெளியுறவு மந்திரியாக ஹீனா ரப்பானிகர் (34) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஒப்புதலை அதிபர் ஆசிப்அலி சர்தாரி வழங்கினார்.  
 இதன் மூலம் பாகிஸ்தானில் பதவி வகிக்கும் முதல் பெண் வெளியுறவு மந்திரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். முஷரப் ஆட்சி காலத்தில் தேசிய அரசியல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ), கட்சியின் எம்.பி. ஆக இருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இவர் தற்போதைய கிலானியின் மந்திரி சபையில் பொருளாதார துறை மந்திரியாக பதவி வகித்தார்.  
 
வெளியுறவு துறை மந்திரி ஆக பொறுப்பு ஏற்று இருக்கும் ஹீனா ரப்பானி வருகிற 26-ந் தேதி இந்தியா வருகிறார். அப்போது புதுடெல்லியில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

0 கருத்துகள்: