புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பின் விசாரணையின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை குறித்து ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மாநிலங்களவை எம்.பியும் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் செயலாளருமான
மவ்லானா மஹ்மூத் மதனி கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும் முன்பே குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்து நடத்தும் பிரச்சாரத்தை ஊடகங்கள் நிறுத்தவேண்டும். குற்றவாளி என தீர்மானிப்பதோ, விசாரணை செய்வதோ, தீர்ப்பு அளிப்பதோ அல்ல ஊடகங்களி பணி. மாறாக மக்களுக்கு சம்பவத்தின் உண்மை நிலையை எடுத்துக்கூறுவதாகும். மக்களை தவறாக புரிந்துக்கொள்ள வைக்காமல் துணிச்சலுடன் குற்றவாளிகளை எதிர்கொள்ள அரசு தயாராகவேண்டும் என மஹ்மூத் மதனி கோரிக்கை விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக