தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.7.11

தி.மு.க வில் பதவி போட்டி தீவிரம்

Thug-India-12
சென்னை:தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையிலான தி.மு.கவில் அதிகாரத்திற்கான இழுபறி துவங்கிவிட்டது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 23,24 தேதிகளில் கோவையில் நடக்கவிருக்கவே கலைஞரின் மகன்களான ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையேயான கருத்துவேறுபாடுகள் வெளியாகியுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலினால் கட்சியின் மீதான நம்பிக்கை தகர்ந்து போனதும், ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட பெருந்தோல்வியும், கலைஞரின் பிள்ளைகளிடையே ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியும் தி.மு.கவை பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்க வைத்துள்ளது. தி.மு.க தற்போது திரிசங்கு நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரை தி.மு.கவின் தலைவராக நியமிக்க கோரிக்கை விடுப்பார்கள் என கருதப்படுகிறது. ஆனால், கட்சியின் தலைவராக கலைஞரே நீடிக்கவேண்டும் என்பது அழகிரியின் நிலைப்பாடாகும். தி.மு.கவின் தலைவர் கருணாநிதிதான் என சமீபத்தில் மு.க.அழகிரி பேட்டியளித்திருந்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கி சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழியும், மத்திய அமைச்சர் பதவி வகிக்கும் மு.க. அழகிரியும் அவர்களது ஆதரவாளர்களும் தி.மு.கவுக்கு கெட்டப்பெயரை சம்பாதித்து கொடுத்துள்ளார்கள் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.இதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஸ்டாலினுக்கும், கலைஞருக்குமிடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
இது தி.மு.கவினருக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதிமாறனும் சி.பி.ஐயின் விசாரணைக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ள நிலையில் கட்சியின் மத்திய அமைச்சரவை பிரதிநிதித்துவமும் தீர்மானம் எடுக்காமல் சந்தேகத்தில் உள்ளது. இரண்டு கேபினட் அமைச்சரவை பதவிகளை தி.மு.கவிற்காக பிரதமர் ஒதுக்கிவைத்துள்ளார்.

0 கருத்துகள்: