கடந்த 2001 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்தது. போரில் வெற்றி பெற்று, தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றினாலும், ஒசாமா-பின்-லேடனை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகத் தேடி வந்தது. இதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டி பாகிஸ்தானுக்கு பல பில்லியன் டாலர்கள் நிதி உதவியை பாகிஸ்தானுக்கு செய்து வந்தது அமெரிக்கா.
இந்நிலையில், கடந்த மே மாத துவக்கத்தில் பாகிஸ்தானில் மறைந்து இருந்த ஒசாமாவை, பாகிஸ்தானின் அனுமதி இல்லாமல் சுட்டுக்கொன்றது அமெரிக்கா. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்களுக்கு தொடர்ந்து பாகிஸ்தானில் தங்கி இருக்க தடைவிதித்ததோடு, அவர்களை உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேறவும் தடைவிதித்தது. இதன் காரணமாக, அமெரிக்கா தான் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியில் சுமார் 800 மில்லியன் டாலர்களை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக