நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், தென்காசி டி.எஸ்.பி. சீனிவாசன் ஆலோசனையின்படி அச்சன்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், ஜெயசந்திரன், வேலுச்சாமி மற்றும் போலீசார் காசிதர்மம் குளத்தின் கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சென்ற வாலிபரிடம் இருந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்த போது, 10 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள், 10 ஜெலட்டின் குச்சிகள், 3 கட்டு சுருள் கம்பி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் வெடிபொருட்களை பறிமுதல் செய்து அதனை கொண்டு வந்த இ.சுப்பையாபுரத்தை சேர்ந்த ஞானதாஸ் (29) மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், புதிய பேருந்து நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் முஸ்லிம்கள் மீது பழிபோட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய சதித்திட்டம் வெட்ட வெளிச்சமானது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 4 பேர் வெடிக்குண்டுகளுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்காசி பகுதியில் ஏற்கனவே வகுப்பு வாத வெறியை கிளறிவிட்டு கலவரத்தை தூண்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பல முயற்சிகளை முன்பு மேற்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இந்நிலையில் தென்காசி அருகேயுள்ள அச்சன்புதூரில் ஞானதாஸ் என்ற வாலிபர் வெடிப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரிடம் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவருக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புபடை அதிகாரிகள் நெல்லை விரைகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக