தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.7.11

ஜெ.- சசி நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர்:கடந்த 1991-96 ஆண்டுகளில் தமிழக முதல்வராக பதவி வகித்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு சொத்து குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக மராத்தான் வேகத்தில் நடைப்பெற்று வந்த இவ்வழக்கின் சாட்சி விசாரணை அண்மையில் முடிவுற்றது. இந்நிலையில் வருகிற 27-ஆம் தேதி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுக்குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறுகையில்
,’இன்று சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 2வது எதிரி சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரினர். ஆனால் அதை நீதிபதி நிரகாரித்து விட்டார்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரும் வரும் 27ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். தங்களது வாக்குமூ்லத்தை அளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அனைவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும்’ என்றார்.

0 கருத்துகள்: