இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆனால், கத்தர் அதிகாரிகளையோ இதர நபர்களையோ மேற்கோள் காட்டாமல் இச்செய்தி வெளியாகி உள்ளது. தாலிபானின் அரசியல் பிரிவு தலைவரான தய்யிப் ஆகா கத்தர் அதிகாரிகளுடன் முதலில் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஆகா ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அப்பத்திரிகை கூறுகிறது. டிசம்பர் நடைபெறவிருக்கும் இரண்டாவது பெர்ன் மாநாட்டின் முன்னோடியாக இப்போதைய பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
அமெரிக்காவின் ஆப்கான் ஆக்கிரமிப்பு துவங்கிய 2001-ஆம் ஆண்டிற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டை உருவாக்குவது தொடர்பான முதல் பெர்ன் மாநாடு நடைபெற்றது. ஆப்கானிலிருந்து அமெரிக்காவிற்கு எளிதாக வெளியேறுவதற்காக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அப்பத்திரிகை கூறுகிறது. கடந்த வாரம் வெளியான உருது செய்தியை பாகிஸ்தானின் த நேசன் பத்திரிகை நேற்று முன்தினம் ஆங்கிலத்தில் வெளியிட்டது. கடந்தவாரம் கத்தர் அதிகாரிகளும், கர்ஸாய் அரசு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். ஆப்கான் பிரதிநிதியாக பாகிஸ்தானில் ஆப்கான் தூதர் உமர் தாவூத்ஸாய் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார் என தகவல் கூறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக