மும்பை : மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிறப்பு கோர்ட் அனுமதியளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதியன்று மகாராஷ்டிராவில் புனேயில் உள்ள மலேகான் என்ற இடத்தில்
குண்டு வெடித்தது. இதில் 11 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி, அபினவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்டில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான கர்னல் பிரசாத் புரோகித், சுதாகர் உதய்பான் திவேதி என்ற தயானந்த் பாண்டே, ரமேஷ் உபாத்யாயா ஆகிய மூவரும் குண்டுவெடிப்பு சதிக்கு திட்டம் வகுத்தனர். இவர்களில் குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கர்னல் புரோகித், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பதுங்கியிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர்களை மகாராஷ்டிரா குற்ற அமைப்பு கட்ப்பாட்டு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், தங்களது காவலில் எடுத்து விசாரிக்க ,பயங்கரவாத தடுப்பு கோர்டில் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட் அனுமதியளித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக