வாசிங்டன், ஜூலை. 22- விண்வெளி பயணத்திற்கான தன இறுதிப் பயணத்தை நிறைவு செய்தது நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலம்.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம்,
உயிரியல்,
பிசிக்கல் சயின்ஸ், வானவியல், வானிலை ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்காக இம்மையம் உருவாக்கப்ட்டது. 1998ல் துவங்கிய இதன் கட்டுமானப்பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையம் 2020ம் ஆண்டுவரை செயல்படும்.உயிரியல்,
விண்வெளி மையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள், பூமியில் இருந்து விண்கலம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. இப்பணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் முக்கிய பங்காற்றியது. இம்மையத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு, நாசா பல விண்கலங்களை அனுப்பியது. ஒவ்வொரு முறையும் விண்கலத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கடைசி விண்கலமான அட்லாண்டிஸ், நேற்றுடன் பயணத்தை முடித்துக்கொண்டது. இதில் வழக்கமான ஆறு பேருக்கு பதிலாக, நான்கு பேர் மட்டுமே சென்றனர். அட்லாண்டிஸ் தரையிறங்கியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்வெளிப்பயணம் முடிவுக்கு வந்தது. இதன்பின் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புவதில்லை என்று நாசா முடிவு செய்துள்ளது.
நாசா இதுவரை கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் என்டவர் ஆகிய விண்கலங்கள் மூலம் 135 விமானங்களை விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஆன மொத்த பயண தூரம் 53,71,14,016 மைல். 3 ஆயிரத்து 35 விண்வெளி வீரர்கள் சென்று வந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக கொலம்பியா மற்றும் சேலஞ்சர் விண்கலங்கள் வெடித்துச் சிதறின. இந்திய விண்வெளி வீராங்கணை கல்பணா சாவ்லா உள்ளிட்ட 14 பேர் இறந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக