தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.7.11

நிலமோசடி புகார்கள் குவிகின்றன தமிழக போலீசில் அதிரடி நடவடிக்கை எப்போது ?

தமிழகத்தில் நில மோசடி குறித்து விசாரணை நடத்த போலீசில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரிவிடம் தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் நிலமோசடி குறித்து விசாரிக்க சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்ட பின்னர் கடந்த சில வாரங்களில் 550க்கும் மேற்பட்ட புகார்கள் அந்த பிரிவிடம் அளிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான புகார்களில் உள்ளூர் திமுக நிர்வாகிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும் அந்த
புகார்கள் எல்லாம் ஆதாரம் இல்லாதவை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மறுத்திருந்தார்.
போலீஸ் கூடுதல் டிஜிபி எஸ்.ஜார்ஜ் அறிவுரையின்பேரில்தான் நிலமோசடி குறித்து விசாரிக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது. அவர்களின் நடவடிக்கையில் அரசியல் சாயல் இருக்காது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் புறநகரில் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவு நிலமோசடி புகார்கள் வந்துள்ளன. சென்னைக்கு அருகில் உள்ளதால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குத்தான் முன்னுரிமை அளிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. நிலமோசடி குறித்து இதுவரை 80 புகார்கள் வந்துள்ளன என்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி எஸ்.மனோகரன் தெரிவித்தார்.

0 கருத்துகள்: