வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசுவாமி கோயிலில்,மொத்தமுள்ள 6 பாதாள அறைகளில், 5 அறைகளை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய 7பேர் குழு திறந்து அதிலிருந்த பொருட்களை கணக்கெடுத்து வருகிறது. நீதிமன்ற
உத்தரவின்படி, இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் தங்கம், வைரத்தலான ஆபரணங்கள், அரிய விலைமதிப்பில்லாத ரத்தினக் கற்கள், விக்கிரகங்கள், தினசரி பூஜைக்கான பொருட்கள் போன்றவற்றை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதுவரை 5 பாதாள அறைகளில் கிடைத்துள்ள பொக்கிசங்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட கதவுகளுடன் திறக்க சவலாக உள்ள எஞ்சிய அறையை திறந்தபிறகு பொக்கிசங்களின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பொக்கிசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எடுக்க வேண்டிய நிலை மற்றும் கோயில் பாதுகாப்பு குறித்து கேரள அமைச்சரவை விவாதித்தாக தெரிகிறது. பத்மநாபசுவாமி கோயிலுக்கு இப்போது கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் இது தொடர்பான திட்டம் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கு பிறகு அது செயல்படுத்தப்படும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திட்டத்தை மாநில டிஜிபி ஜேக்கப் புன்னோஸ் தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இதன்படி, கோயிலைச் சுற்றி 500 மீட்டர் பகுதியை சிறப்பு பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்படும். முக்கிய இடங்களில் நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகவும், 24 மணி நேரமும் போலீசார் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிகிறது. கோயில் வளாகம் மற்றும் பக்தர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் இதற்காக சிறப்பு படை அமைக்கப்பட உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், ஆகம விதிகள், கோயில் விதிமுறைகளை அனுசரித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்பட வேண்டும் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் உம்மண் சாண்டி உத்தரவிட்டுள்ளார். கேரள போலீசார் தயாரித்துள்ள பாதுகாப்பு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயகுமார் தெரிவிப்பார். பாதாள அறை பொக்கிசங்கள் கணக்கெடுக்க உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வுப் பெற்ற நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவில், ஜெயகுமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பத்மநாபசுவாமி கோயில் 6வது ரகசிய அறையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை ரகசிய அணையை திறக்கக்கூடாது எனவும் கோவில் நகைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை தரும்படி கேரள மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக