தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.4.11

சிரியாவில் அவசர நிலை வாபஸ்


Syrian-Cabinet-meeting
டமாஸ்கஸ்:48 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் அவசரநிலை சட்டத்தை அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று அவசரநிலை சட்டத்தை வாபஸ்பெற வேண்டுமென்பதாகும்.
அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் மூத்த வழக்கறிஞர் உத்தரவில் உடனடியாக கையெழுத்திடுவார். அரசியல் கைதிகளின் விசாரணை நடந்துக்கொண்டிருந்த பாதுகாப்பு
நீதிமன்றத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், ஹோம்ஸ் நகரத்தில் திரண்ட அரசு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஆயுத ஏந்தியவர்களின் நடவடிக்கையை பொறுக்கவியலாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வன்முறையாளர்களின் தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகளும், 3 குழந்தைகளும் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் இறந்துபோனதாக நேரில் கண்ட சாட்சி தெரிவிக்கிறார்.
நேற்று முன்தினம் போலீஸ் நடத்திய துப்பாகிச்சூட்டில் கொல்லப்பட்ட 12 நபர்களின் மரணச் சடங்குகளை நடத்தியபிறகு ஹோம்ஸில் க்ளாக் சதுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.
சிரியாவில் பஸ்ஸாருல் ஆஸாத் அரசுக்கெதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து ஏராளமான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்தில் எதிர்ப்பாளர்களின் எழுச்சிமையமான தஹ்ரீர் சதுக்கத்தின் பெயரை ஹோம்ஸில் க்ளாக் சதுரத்திற்கு சூட்டுவது குறித்து எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்: