தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.4.11

நன்கொடைக்கு வருமானவரி ​கட்டாத பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக போராடுவதா? ​- திக்விஜய்​சிங்


swamilead1_203x152
புதுடெல்லி:லோக்பால் மசோதா வரைவுக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழலுக்கு எதிரான ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பாபா ராம்தேவ் ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அன்னா ஹஸாரேவின் ஊழல் குறித்து 2005-ஆம் ஆண்டு நீதிபதி பி.பி.சாவந்த் நடத்திய விசாரணை கமிஷன் அறிக்கை வெளியாகியிருந்தது.
சாந்திபூஷன் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கு எதிராக சி.டி ஒன்று வெளியானது. சாந்தி பூஷனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான சி.டியில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன. ஆனால், ஹஸாரே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவாக உள்ளன.
இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறுகையில், “லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரும் சேர்க்கப்பட வேண்டும்.
உத்தராஞ்சலில் பல்கலைக்கழகம் அமைக்க இடம் வேண்டும் என்று அம்மாநில முதல்வராக இருந்த நாராயண் தத் திவாரியிடம், யோகா குரு பாபா ராம் தேவ் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு ரூ.1,100 கோடி மதிப்புள்ள நிலத்தை நாராயண் தத் திவாரி அளித்தார். இவ்வாறு காங்கிரஸ் முதல்வரிடம் இருந்து நிலம் பெற்ற ராம்தேவுக்கு காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்று கூற உரிமையுள்ளதுதான்.
உண்மையிலேயே கறுப்புப் பணத்துக்கு எதிராக போராடுபவராக ராம் தேவ் இருப்பவராக இருந்தால், மற்றவர்களிடமிருந்து அவர் நன்கொடைப் பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால் அந்தப் பணத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் காந்தியவாதி ஹஸாரேவை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் அவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் புகழத் தேவையில்லை” என்றார்.

0 கருத்துகள்: