தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.4.11

விசாரனை வளையத்தில் ஹோஸ்னி முபாரக்கின் மகன்கள்


hosni mubark sonss
கெய்ரோ:டோரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கின் மகன்களான அலா மற்றும் கமால் முபாரக் வழக்கறிஞர்களால் விசாரணை செய்யப்பட்டனர்.
முபாரக் மகன்களை சிறைக்கு வெளியில் அழைத்து செல்வது பாதுக்காப்பானது அல்ல என்று தலைமை சட்ட அதிகாரி தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் சிறைக்குள்ளேயே விசாரணை செய்யப்பட்டார்கள்.
முபாரக் சகோதரர்கள் இருவர்
மீதும் பொது உடைமைகளை தனியார் மயமாக்கி அதன் பங்குகளை சட்ட விரோதமாக விற்றது சம்பந்தமாகவும் எகிப்தில் கால் பதிக்க வந்த பன்னாட்டு நிறுவனங்களில் வலுக்கட்டாயமாக தங்களை பங்குதாரராக இணைத்துக் கொண்டது குறித்தும் விசாரிக்கப்பட்டனர்.
எகிப்தில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ள ஆங்கிலேயே நிறுவனத்துடன் இருக்கும் தொடர்பு மற்றும் சொந்த நாட்டிலேயே வரி ஏய்ப்பு செய்த எண்ணெய் நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டது.
அஹ்ரம் என்ற இணையதள புலனாய்வு பத்திரிக்கை ஒன்று முபாரக் மகன்களுக்கு புல்லியன் என்ற நிதி நிறுவனத்தில் அதிக பங்கு உள்ளதாக தெரிவிக்கிறது. பொது மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரிவிக்கப்படும் என்று விசாரணைக்குழு தெரிவித்தது.  மேலும் விசாரணை முறைகளும் ஆதாரங்களும் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
கமால் மற்றும் அலா முபாரக் ஆகியோரிடம் ஊழல் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மேலும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: