தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.4.11

வீட்டுச்சிறையில் என கூறப்பட்ட ஹோஸ்னி முபாரக் எகிப்திலேயே இல்லை : புதிய அதிர்ச்சி தகவல்


மக்கள் புரட்சி மூலம் எகிப்து அதிபர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக், தனது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு அவர் சவுதி அரேபியாவுக்கு தப்பி ஓடிவிட்டதாக வந்த தகவலை முற்றாக மறுத்திருந்த,  எகிப்தின் புதிய இராணுவ அரசு, பெப்ரவரி
11ம் திகதி முதல் ஹோஸ்னி முபாரக் தனது குடும்பத்தினருடன், ஷாம் எல் ஷேய்க்கில் உள்ள விடுதியில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எங்கும் தப்பி ஓடிவிட முடியாது. அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்படும் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஹோஸ்னி முபாரக்கின் எதிர்ப்பாளர்கள் அமைதியாகினர்.

எனினும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஹோஸ்னி முபாரக் எகிப்தில் இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக ஜேர்மனி வந்துள்ளார் என கூறப்படுகிறது.

0 கருத்துகள்: