தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.4.11

நான் யாரையும் அடிக்கவில்லை!! அது கிராபிக்ஸ்!!

எப்ரல் 4, தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், ’இன்றைய தினம் ஏழைகளின் அடிவயிறு பற்றி எரிகிறது. ஏழைகளின் இந்த வயிற்றெரிச்சல் நிச்சயம் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாது.

’’தமிழகத்தில் எமர்ஜென்சி நடக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார். அரசு

அதிகாரிகள் சரியாக வேலை செய்வது தவறா?. அனைத்து மக்களும் நிம்மதியாக நட மாடுகிறார்கள்.

எல்லாமே சரியாக தான் நடக்கிறது. அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்தால் எமர்ஜென்சி என்கிறார். நீங்கள் சென்றால் மட்டும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும். மற்றவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?. அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும்.

2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி தரவில்லை. எல்லா விஷயத்தை பற்றியும் பேசுகிறார், ஆனால் விலைவாசி உயர்வை பற்றி மட்டும் பேசவில்லை. ஒருகிலோ அரிசி ரூ.1-க்கு கொடுத்தார்.

பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். அதனை செய்யாமல் இப்போது ஓட்டுபோடுங்கள் பருத்தி கொட்டை, புண்ணாக்கு தருகிறோம் என்று கூறுகிறார்கள்.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி, விற்பனை விலையை உயர்த்தாமல் இடைப்பட்ட விலையை அரசு ஏற்கவேண்டும். ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும். அதுவும் காவல்துறையில் காட்சிகள் உடனே மாறும்.

நான் யாரையும் அடிக்கவில்லை. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் செய்து ஒளிபரப்புகிறார்கள். தேர்தல் அதிகாரியை அடித்ததை ஒளிபரப்ப வேண்டியது தானே. கருத்து கணிப்பையும் மக்களுக்கு டி.வி.யில் காண்பிக்கலாமே. ஏன் காட்டவில்லை’’ என்று பேசினார்.

0 கருத்துகள்: