தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.11

மக்கா மஸ்ஜித், அஜ்மீர் குண்டுவெடி வழக்குகளின் விசாரணை பொறுப்பை என்.ஐ.ஏ ஏற்றுக்கொண்டது


610x
புதுடெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தொடர்புடைய மூன்று தீவிரவாத குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) ஏற்றுக்கொண்டது.
மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா,மலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணையை என்.ஐ.ஏ ஏற்றுக்கொண்டுள்ளது.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு
நிகழ்த்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ்
குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை பொறுப்பை என்.ஐ.ஏ ஏற்கனவே எடுத்துகொண்டது.
சி.பி.ஐ, ராஜஸ்தான் ஏ.டி.எஸ் ஆகியன உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து என்.ஐ.ஏ இம்மூன்று வழக்குகளையும் பதிவுச்செய்துள்ளது.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு வழக்குகளை ஒன்றாக விசாரிக்கலாம் என என்.ஐ.ஏ தெரிவித்திருந்தது. ஆனால், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷியின் மரணத்தைக் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு தயாரில்லை.

0 கருத்துகள்: