
தெஹ்ரான்: தெஹ்ரான் தூதுவர் டமாஸ்கசில் அதிகார திமிர் பிடித்த மேற்குலகம் முஸ்லிம் நாடுகளைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திர்காக துண்டாட நினைப்பதாக கூறியுள்ளார். மேற்குலகம் தங்களுடைய அரசியல் நோக்கத்தை முஸ்லிம் உலகை ஜனநாயகம் என்ற போர்வையில் பிரித்தால நினைக்கிறது.அதனால் தற்கால சூழலில் முஸ்லிம் நாடுகள் எதிரிகளின் சதியை முறியடிக்க உறுதியாக நின்று சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட
வேண்டுமென்று தெஹ்ரான் தூதுவர் சையது அஹ்மத் மௌசவி கேட்டுக்கொண்டுள்ளார்.முஸ்லிம்களை பிரித்தாளுவதை தனது கொள்கையாகவும் அதற்கான வேலைகளை கூடுதல் முக்கியதுவதுடனும் இஸ்லாமிய எதிரிகள் மேற்கொண்டு வருவதாக மௌசவி கூறியுள்ளார்.எகிப்தின் சர்வாதிகாரம் பற்றி கூறும்போது நமது எதிரிகள் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியில் இருக்கும் வரை அவருக்கு ஆதரவாக இருந்தனர். அவர் பதவி பறிபோனவுடன் மக்கள் பக்கம் சேர்ந்து கொள்வதாக கூறியதை நினைவுக்கூறினார்.
இன்று எமன் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹிர்க்கு இஸ்லாத்தின் எதிரிகள் ஆதரவாக உள்ளனர். கடந்த ஜனவரி முதல் எமெனில் நடந்து வரும் போராட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். சிரியாவின் அரசியல் சுதந்திரம், வளர்ச்சி மற்றும் சர்வேதச அங்கீகாரம் குறித்து எதிரிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அதனால் சிரியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என தெரிவித்தார்.
நமது எதிரிகள் அனைவரும் ஒரு அணியில் சேர்ந்துகொண்டு எகிப்த முன்னால் அதிபர் முபாரக் ஆட்சியில் இருக்கும்போது எகிப்தில் எவ்வாறு தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தினார்களோ அதே போன்று சிரியாவிலும் செய்ய நினைப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது சிரியாவில் அரசக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது. போராட்டத்தில் ராணுவத்தினரும் பொது மக்களும் இறந்துள்ளனர்.போராட்டத்திற்கு காரணமானவர்கள் சிலரை ராணுவம் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தூது
நன்றி : தூது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக